வெனிசுலாவை அமெரிக்கா நிர்வாகம் செய்யும்... ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், அதற்கு அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்த நிலையில், வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து மேற்கொண்டு, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி சில கப்பல்களை சுட்டு வீழ்த்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முறியடிப்போம்” என மதுரோ கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த பதற்றமான சூழலில், இன்று அதிகாலை கராகஸ் நகரில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டது. தாக்குதலுக்குப் பிறகு ராணுவ தளங்களைச் சுற்றிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக டிரம்ப் சமூக வலைதளத்தில் அதிரடியாக அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணாத அளவிலான தாக்குதல் இது. மதுரோ ஒரு சட்டவிரோத சர்வாதிகாரி; அவர் அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய நபர்” என்றார். மேலும், “வெனிசுலாவை தற்காலிகமாக அமெரிக்கா நிர்வாகம் செய்யும். அங்கு அமைதி, சுதந்திரம், பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்படும்” என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
