அமெரிக்க செயற்கைக்கோள்… இஸ்ரோவில் டிசம்பர் 24-ல் விண்வெளி பாய்ச்சல்...
அமெரிக்காவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை இந்தியாவின் எல்விஎம்–3 ராக்கெட் மூலம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இஸ்ரோவின் வணிக பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட், வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 430-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் ‘ப்ளூபோர்ட்-6’ என்ற தகவல்தொடர்பு செயற்கைக்கோளை எல்விஎம்–3 ராக்கெட் மூலம் ஏவுவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து டிசம்பர் 24-ஆம் தேதி காலை 8.55 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் பாய்ச்சப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

6,500 கிலோ எடை கொண்ட ப்ளூபோர்ட்-6 செயற்கைக்கோள், இஸ்ரோ இதுவரை ஏவியவற்றில் மிக அதிக எடையுடையதாகும். இந்த செயற்கைக்கோள் மூலம் தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கும் கைப்பேசி இணைப்பு மற்றும் அதிவேக 5ஜி இணைய சேவைகள் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளித் துறைக்கு இது மற்றொரு முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
