இனி விமானப் பயணங்களில் பவர் பேங்க் பயன்பாட்டுக்கு தடை!
நாம் தினமும் பயன்படுத்தும் செல்போன், லேப் டாப் போன்ற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய பவர் பேங்க் பயன்படுகிறது. பயணம் செல்லும் போது பவர் பேங்கை கையோடு எடுத்துச் செல்வது இன்று வழக்கமாகிவிட்டது. ஆனால் சமீப காலமாக விமானங்களில் பவர் பேங்க் அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, விமானப் பயணத்தின் போது செல்போன் மற்றும் பிற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய பவர் பேங்கை பயன்படுத்த மத்திய விமான போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. பவர் பேங்க்களில் உள்ள லித்தியம் அயன் பேட்டரிகள் அதிக வெப்பத்தை உருவாக்கக்கூடியவை என்றும், குறைபாடு ஏற்பட்டால் மின்கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் பவர் பேங்கை அவசியமாக கைப்பையில் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்றும், மற்ற பைகளில் வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பைகளுக்குள் வைத்திருக்கும் போது தீப்பற்றினால் அதை உடனடியாக கண்டறிவது கடினம் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு விமானப் பாதுகாப்பை உறுதி செய்ய எடுத்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
