விபத்தில் சிக்கிய வாகனம்.. ஓட்டுநரை கவனிக்காமல் கோழிகளை ஆட்டைய போட்ட கிராம மக்கள்!

 
கண்ணோஜ் லாரி

உத்தரபிரதேச மாநிலம் கண்ணோஜ் பகுதியில் கோழிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அமேதியில் இருந்து பிர்சாபத் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியின் ஓட்டுநர் சில நிமிடங்கள் தூக்க கலக்கம் காரணமாக கண் அயர்ந்தார். இதனால், அதிவேக நெடுஞ்சாலையில் வேகமாக வந்ததால் லாரி கவிழ்ந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஏராளமான மக்கள், விபத்தை கவனிக்காமல், லாரியில் இருந்து வெளியே வந்த கோழிகளை விரைவாகப் பிடித்தனர்.


மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மிதிவண்டிகளில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் கோழிகளைப் பிடித்து வீட்டிற்குச் சென்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று கூட்டத்தை அப்புறப்படுத்தினர். விபத்தில் காயமடைந்த ஓட்டுநரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் செயல் சமூக ஊடகங்களில் மிகவும் கண்டிக்கத்தக்கதாக மாறி வருகிறது. விபத்தை கருத்தில் கொள்ளாமல் உணவு தேடலாக இதைப் பார்த்ததற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web