விக்டோரியா அரங்கத்தை சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்... ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்!
இன்று முதல் சென்னையில் உள்ள விக்டோரியா பொது அரங்கம் அருங்காட்சியக கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஆனால் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே விக்டோரியா பொது அரங்கத்தை பார்வையிட அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பொதுமக்கள் விக்டோரியா அரங்கத்தை பார்வையிடலாம். ஒவ்வொரு 1.30 மணி நேர இடைவெளியிலும் அதிகபட்சமாக 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும், விக்டோரியா பொது அரங்கின் கலை அரங்கில் நிகழ்ச்சிகள் நடத்த விரும்புவோரும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். பார்வையாளர்கள் விதிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
