பகீர் வீடியோ... நிதானமாக ஆற்றில் நீச்சலடிக்கும் பிரம்மாண்டமான பாம்பு!

 
பாம்பு

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியாகிய ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் பாசி படர்ந்த ஆற்றில், பிரம்மாண்டமான அனகோண்டா பாம்பு ஒன்று மெதுவாக நீந்தி செல்லும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவில்  @dr.ajaykrishna_angara என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்டுள்ளார். பாம்பின் நீளம் சுமார் 20 அடி இருக்கலாம் எனத் தெரிகிறது.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  பலரும் அந்த பாம்பின் அசுரன் உருவத்தை பார்த்து திகைத்து வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய அனகோண்டா பாம்பு

தற்போது வரை இந்த வீடியோ 2.5 மில்லியன் பார்வைகள் மற்றும் 1.4 மில்லியனுக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. விஷம் இல்லாவிட்டாலும், அதன் பிடி பலத்தால் பெரிய உயிரினங்களையே நொறுக்க முடியும். பொதுவாக, இது அடர்ந்த காடுகளில் மட்டுமே காணப்படும். இந்த பாம்பு வகை   மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் செல்லுவதில்லை.
இந்த வீடியோவில் பாம்பின் அமைதியான நீச்சல், அதன் பிரம்மாண்ட உருவம் மற்றும் இயற்கையின் வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.  இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது இதுவரை தெளிவாகப் தெரியவில்லை என்றாலும் கூட  உலகம் முழுவதும்   மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web