பகீர் வீடியோ... பிரதமரின் பாதுகாப்பு ஒத்திகையில் குறுக்கே வந்த சிறுவன்... அடித்து வெளுத்த காவலர்!

 
பாதுகாப்பு

ஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் பிரதமர் மோடியின்  வாகன பேரணி நடைபெற்றது. பிரதமரை நேரில் காண வழிநெடுகிலும் சாலையின் இரு பகுதிகளிலும் மக்கள் திரண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் மற்றும் பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.   

குஜராத்தின் சூரத் நகரில் ரத்தன் சவுக் பகுதியில், பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அவருடைய பாதுகாப்பு வாகனங்கள் வரிசையாக சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன. பிரதமரின் வருகையின்போது, பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் இல்லை என உறுதி செய்து கொள்வதற்காக இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. அப்போது, 17 வயது சிறுவன் ஒருவன் அந்த சாலையில் மற்றொருபுறம் ஓரத்தில், சைக்கிளில் பயணித்தபடி சென்றுள்ளான்.


திடீரென வாகன வரிசையை நோக்கி சென்று, பின்னர் சைக்கிளை திருப்பி ஓட்டி சென்றான்.   அந்த சிறுவனை உதவி காவல் ஆய்வாளரான பி.எஸ். கத்வி தடுத்து நிறுத்தியுள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னிட்டு அதற்கு உதவியாக பணியில் இருந்த கத்வி, சிறுவனுடைய தலைமுடியை பிடித்து, இழுத்து ஆவேசத்தில் கன்னத்தில் அறைந்தார். 

இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   இதுபற்றி சிறுவனின் உறவினர் ஒருவர் கூறும்போது, சிறுவன் பல மணிநேரம் கழித்து இரவு 9.30 மணிக்கு  அழுது கொண்டே வீட்டுக்கு வந்துள்ளான். அவனை போலீசார் அடித்து விட்டனர். ஆனால், எதற்காக அடித்தனர் என தெரியவில்லை என குடும்பத்தினரிடம் கூறினான்.

பிரதமர் மோடி

காவல் நிலையத்திற்கு அவனை அழைத்து சென்றுள்ளனர். அவனை அடிப்பதற்கு பதிலாக, காவலர்கள் ஆலோசனை வழங்கியிருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு சிலர் ஆதரவையும், எதிர்ப்பையும் பதிவிட்டு வருகின்றனர்.  

காவலர் அவருடைய கடமையை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோதும், சிறுவனுக்கு ஆலோசனை வழங்கியிருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். இதுபற்றி காவல் துறையை சேர்ந்த துணை ஆய்வாளர் அமித வனானி  “கத்வியின் அணுகுமுறை முற்றிலும் முறையற்றது. அது வருத்தத்திற்குரியது” என கூறினார்.

மோர்பி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியில் இருந்த கத்வி, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஓராண்டுக்கு கத்வியின் சம்பள உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web