பகீர் வீடியோ... மனைவியை அடித்து, மாடியிலிருந்து வீசிய கணவனின் குடும்பம்!

 
மனைவியை தள்ளி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜாலௌன் மாவட்டம் ஒரை பகுதியில் அதிர்ச்சி தரும் சம்பவம்  பதிவாகியுள்ளது. ஜூன் 19ம் தேதி இரவு, தனது 2 வது மனைவியான 35 வயது ஆம்னாவை, கணவர் ஆரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் 2வது மாடியில் இருந்து தள்ளி  விட்டதாக  புகார் எழுந்துள்ளது.

இச்சம்பவம் வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த  சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.  ஆம்னாவின் தந்தையான கமர் சித்திகி அளித்த புகாரின் பேரில், தனது மகள் ஆரிபை 4 ஆண்டுகளுக்கு முன் 2 வது திருமணம் செய்து கொண்டார்.  முதல் திருமணத்தில் பிறந்த மூன்று குழந்தைகளில் இரு குழந்தைகளை திருமணத்துக்குப் பிறகு வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவைத்ததாகவும் கூறினார்.
மேலும், ஆம்னாவை வீட்டில் வைக்க ரூ.1 கோடி வரதட்சணை  கொண்டுவர வேண்டும் எனக் கேட்டு தகராறு செய்துள்ளார். 

இந்நிலையில் கடந்த ஜூன் 19 மாலை, அவரது பேரன் கொடுத்த தகவலின்பேரில் கமர் சித்திகி சம்பவ இடத்துக்கு வந்து, ஆம்னாவை மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு முதலுதவி செய்து  மேல் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

தந்தையை கொலை செய்த மகன்!! திடுக்கிடும் பரபரப்பு வாக்குமூலம்!! 
ஆம்னா கூறியதின்படி, அவரது கணவர் ஆரிப், சகோதரர் இம்ரான், சகோதரி ஷெஹ்நாஸ், அரிபின் முதல் திருமணத்திலிருந்த மகள் நிதா மற்றும் அவரது தந்தை ரஹ்மத்துல்லா ஆகியோர் ஒன்றுசேர்ந்து  தன் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியதாகவும்  ஓடத் தொடங்கியதும்  ஷெஹ்னாஸ் மற்றும் நிதா அவரை அறையில் பூட்டிவைத்து தாக்கியதுடன், பின்னர் மாடியில் ஓடியபோது கீழே தள்ளிவிட்டதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.  வீடியோவில், ஒரு பெண் மாடியிலிருந்து கீழே விழுவதும், பைக்கின் மேல் பட்டு விழுவதும் காணப்படுகிறது. இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது