வைரலாகும் வீடியோ... 2000 கி.மீ. பாய்ந்து தாக்கும் ஈரான் ஏவுகணை!
போர் பதற்றம் மேற்கு ஆசியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று தொடர்ந்து ஆறாவது நாளாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்கள் காரணமாக அந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
2000கிமீ வரை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்! pic.twitter.com/SOF13aBvpg
— Dina Maalai (@DinaMaalai) March 5, 2026
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தை நோக்கி சுமார் 2,000 கிலோமீட்டர் தூரம் செல்லும் கோராம்ஷஹர்-4 ஏவுகணையை ஏவியதாக தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் விமானப்படையின் 27வது படைப்பிரிவு தளத்தையும் தாக்கியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஆனால் இந்த தகவல்களை இஸ்ரேல் மறுத்துள்ளது. தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான ஏவுகணைகளை இடைமறித்ததாகவும், ஒரு ஏவுகணை மட்டுமே வெற்று இடத்தில் விழுந்ததாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
