வைரலாகும் வீடியோ... துபாயில் குடும்பத்துடன் அஜித் ஜாலி படகு சவாரி!

 
அஜித்

உலகில் நடிகர் அஜித்துக்கு மிக பிடித்த இடம் என்றால் அது துபாய் தான். அதிகளவில் ரசிகர்களின் தொந்தரவு எதுவும் இல்லாமல், பிரைவசி கருதியும், துபாய் பிடித்து போனதால், துபாயில் சொந்தமாக வீடு வாங்கி, அதிக பொழுதை துபாய் வீட்டில் கழித்து வருகிறார் அஜித். இந்த புத்தாண்டு கொண்டாட்டமும் துபாய் வீட்டில் தான் குடும்பத்தினரோடு அஜித் இருந்தார். ஏற்கெனவே புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிவு செய்யப்பட்ட நிலையில், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால் போலவே அஜித்தும் விஜயகாந்த் மரணத்திற்கு வரமுடியாமல் போனது. இந்நிலையில், இரவு நேரங்களில் தன்னுடைய குடும்பத்தினருடன் துபாயில் ஜாலியாக அஜித் சென்ற படகு சவாரி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், முதல் கட்டப் படப்பிடிப்பைத் தொடர்ந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் சிறிது பிரேக் கிடைத்தாலும் அந்த நாட்களை தன்னுடைய துபாய் பங்களாவில் கழித்து வருகிறார் அஜித். 

அஜித் குடும்பம்

இந்நிலையில், அஜித் இப்போது ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு இடைவேளையின் போது துபாய் சென்றிருக்கிறார். அங்கு தனது குடும்பத்துடன் இரவு நேரத்தில் ஜாலியாக படகு சவாரி சென்றிருக்கிறார் அஜித். அஜித்தை ஷாலினி மற்றும் குழந்தைகளுடன் பார்த்த அங்கிருந்த ரசிகர்கள் சிலர், ‘தல’ என்று கத்தி உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதைப் பார்த்து அஜித் அவர்களுக்கு கையசைத்து வாழ்த்து கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web