வைரலாகும் வீடியோ... போதையில் திருநங்கைகள் அட்டகாசம் - தொழிற்சாலைகளில் புகுந்து 'மாமூல்' கேட்டு மிரட்டல்!

 
போதையில் திருநங்கைகள்

சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வரும் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில், கடந்த சில நாட்களாக மதுபோதையில் திருநங்கைகள் மாமூல் கேட்டு மிரட்டும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஆட்டோக்களில் கும்பலாக வரும் திருநங்கைகள், தொழிற்சாலை வாசலில் இருக்கும் காவலாளிகளுடன் தகராறில் ஈடுபடுகின்றனர். அவர்களை மீறி அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டு அலுவலக அறைக்குள் அத்துமீறி நுழைகின்றனர்.


அலுவலக ஊழியர்களிடம் நிர்ணயித்த தொகையை 'மாமூல்' ஆகக் கேட்டு மிரட்டுகின்றனர். ஊழியர்கள் தரும் தொகையை ஏற்க மறுத்து, தாங்கள் கேட்கும் பெரும் தொகையைத் தரும் வரை அங்கிருந்து நகராமல் ஆபாசமாகப் பேசி ரகளையில் ஈடுபடுகின்றனர்.

ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் மாமூல் மிரட்டல்களுக்கு மத்தியில், இப்போது திருநங்கைகளின் இந்தத் திடீர் அச்சுறுத்தல் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தனியார் தொழிற்சாலை மேலாளர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு, ரகளையில் ஈடுபட்ட திருநங்கைகளைக் கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். தொழில் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய செயல்களைக் கட்டுப்படுத்தக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!