வைரலாகும் வீடியோ... கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தா இவனும் ஃப்ரையாகி இருப்பான்... உஷார் மக்களே!

சமூக வலைதளங்களில் தினமும் பல்வேறு வகையான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக உணவுப் பதிப்புகள், காமெடி, சண்டை குறித்த வீடியோக்கள் பார்வையாளர்களை கவர்கின்றன.அதன் படி சமீபத்தில் வெளியான ஒரு ஆற்றின் கரையில் அடுப்பு அமைக்கப்பட்டு, அதில் எண்ணெய் சூடாக்கப்படுகிறது. பின்னர், ஒரு பெரிய மீன் நறுக்கப்பட்ட மசாலா, வெங்காயம், தக்காளி இவைகளுடன் வாணலியில் வைக்கப்படுகிறது.
मछली के साथ साथ भाई का भी आज फ्राई हो जाता। pic.twitter.com/yITt7IBqeI
— Reetesh Pal (@PalsSkit) June 23, 2025
அதே சமயத்தில் திடீரென வாணலியில் இருந்து நெருப்பு பாய்ந்து எழுகிறது. அதனை வறுத்து கொண்டிருந்தவர் அதிர்ச்சியில் கூச்சலிட்டு பின்வாங்குகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘மீனுடன் சகோதரனும் இன்று வறுக்கப்பட்டிருப்பார்’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலர் “முழுக்க கொதிக்கும் எண்ணெய்தான்!” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், “அவரே வறுப்பதிலிருந்து மயிரிழையில் தப்பினார்” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ மீண்டும் ஒரு முறை, பொதுமக்கள் வெளிப்புறங்களில், பாதுகாப்பில்லாமல் உணவுப்பொருட்களை தயாரிக்கும்போது ஏற்படக்கூடிய ஆபத்துகளை எடுத்துக்காட்டுகிறது.
கொதிக்கும் எண்ணெய் மற்றும் திறந்தவெளி அடுப்புகள் தீ விபத்து ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிப்பதால் இத்தகைய முயற்சிகளை பொறுத்தவரை முன்னெச்சரிக்கையை கடைப்பிடிக்க வேண்டும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!