வைரலாகும் வீடியோ... மராத்தியில் பேசிய இளைஞரை இந்தியில் மன்னிப்பு கேட்க வைத்த பொதுமக்கள்!

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தி மொழிப் பிரச்சாரத்தை மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா முன்னெடுத்து வருகிறது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. MNS இயக்கத்தை சேர்ந்த ஒருவர், ஒரு முஸ்லீம் வாழும் பகுதிக்கு சென்று, அங்குள்ள மக்களை மராத்தி பேசக் கட்டாயப்படுத்தினார். ஆனால் அந்த நபரின் திட்டம் எதிர்பாராத வகையில் திருப்பம் பெற்றது.
Kalesh over this guy opposed a street vendor for not speaking in Marathi but soon mob gathered and Forced him to Apologise in Hindi:
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 6, 2025
pic.twitter.com/7F37omTfwF
அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அவரை சுற்றி வளைத்து, நேரடியாக எதிர்த்துப் பேசி, அவரை மன்னிப்பு கேட்க வைத்தனர். குறிப்பாக, மராத்தி பேச வற்புறுத்த வந்த அவரை, ஹிந்தியில் மன்னிப்பு கேட்க வைத்தனர்.
அவர் இந்தியில் மன்னிப்பு கேட்டு, ஏன் மன்னிப்பு கேட்டேன் என்பதையும் விளக்கி பேசியுள்ளார். இது குறித்து காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பதிவிட்ட நெட்டிசன்கள், “MNSக்கு மகாராஷ்டிராவில் எந்த பெரிய அமைப்புப் பலமும் இல்லை.
அவர்கள் சாதாரண மக்களை மட்டுமே பயமுறுத்த முடியும்.இப்படிப் பயமுறுத்துபவர்களுக்கு எதிராகக் கூட்டாக நிற்போம் என்றால், அவர்கள் சுலபமாக பின்னடைவார்கள்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், மராத்தி மொழி பிரச்சாரத்தின் எதிரொலியையும் அதிகரித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!