வைரலாகும் வீடியோ... கார் மீது ஏறி நின்று சண்டைப் போட்ட ஸ்பைடர்மேன்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூன் விகாஸ்நகரில், ஸ்பைடர்மேன் உடையில் வாகனத்தின் கூரையில் இளைஞர் ஒருவர் ஸ்டண்ட் செய்தார். இது குறித்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது அந்த வீடியோவில், மஹிந்திரா கார் மீது ஒரு இளைஞர் அமர்ந்து ஸ்டண்ட் செய்வது, மேலும் மற்றொரு இளைஞர் சிவப்பு கரடி உடையில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போன்ற காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன.
இவர்கள் போக்குவரத்து விதிகளை புறக்கணித்து, சாலை பாதுகாப்பை மதிக்காமல் நடந்து கொண்டனர்.இந்த வீடியோவில் இருந்த இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஸ்டண்ட் செய்யப்பட்ட மஹிந்திரா தார் மற்றும் மோட்டார் சைக்கிள் இரண்டும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.
🕷️ Spider-Man नियम तोड़कर फँस गया #UttarakhandPolice के जाल में!
— Uttarakhand Police (@uttarakhandcops) June 21, 2025
चलती गाड़ी से बाहर निकलकर छत में बैठाकर स्टंट व रैश ड्राइविंग करते युवकों के सोशल मीडिया पर प्रसारित वीडियो का संज्ञान लेकर देहरादून पुलिस ने युवकों को हिरासत में लिया और दोनों गाड़ी सीज कर वैधानिक कार्यवाही की। pic.twitter.com/0rAVoeUMog
“இப்படி ஸ்டண்ட் செய்வது விபத்து ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது” எனவும், இது பிறரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும் செயல். இது போன்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எந்தவித சகிப்புத்தன்மையும் இல்லை. எதிர்காலத்தில் இதுபோன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இச்சம்பவம், பொதுமக்கள் சாலையில் சுறுசுறுப்பாக பயணிக்க தேவையான பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது. “போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது என்பது ஒவ்வொரு நபரின் கடமை” என்பதையும், “பொழுதுபோக்குக்காக சாலையில் ஸ்டண்ட் செய்வது பொறுக்க முடியாத செயல்” என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!