வைரலாகும் வீடியோ... காங்கிரஸார் வந்து சென்றதால் 'மஞ்சள் தண்ணீர்' தெளித்து 'தீட்டு' கழித்த பாஜகவினர்!
டெல்லி ஏஐ மாநாட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து புதுச்சேரியில் இரு கட்சிகளுக்கும் இடையே உருவபொம்மை எரிப்பு மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதன் தொடர்ச்சியாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியினர் இன்று பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தன.
சாதிய வன்மம் தலைக்கேறிய நாய்கள்…
— D Force (@DforceOffl) February 22, 2026
காங்கிரஸ் மகளிரணி தலைவர் போராட்டத்திற்கு வந்த இடத்தை கழுவி தீட்டு கழிப்பதாக கூறும் பாஜக சாதிவெறி மதவெறி கும்பல் !! 😡😡😡 pic.twitter.com/63bK06dy6U
போராட்டக்காரர்கள் கலைந்து சென்ற பிறகு, புதுச்சேரி பாஜக மகளிர் அணியினர் பாஜக தலைமை அலுவலக வாயில் பகுதிக்குத் திரண்டு வந்தனர். அவர்கள் கைகளில் வாளிகளுடன் வந்து, காங்கிரஸ் கட்சியினர் நின்றிருந்த இடங்கள் மற்றும் அலுவலக நுழைவாயில் பகுதியில் மஞ்சள் தண்ணீரைத் தெளித்துக் கழுவினர்.
இது குறித்துப் பேசிய பாஜக மகளிர் அணியினர், "காங்கிரஸ் மகளிர் அணித் தலைவி உள்ளிட்ட நிர்வாகிகள் எங்கள் அலுவலகப் பகுதிக்கு வந்து சென்றதால், அந்த இடம் அசுத்தமாகிவிட்டது. எனவே, மஞ்சள் தண்ணீர் ஊற்றித் தீட்டு கழிக்கிறோம்" என்று ஆக்ரோஷமாகக் கூறினர்.

ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாஜகவினரின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே இரு தரப்பு நிர்வாகிகள் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
