வைரலாகும் வீடியோ... போதையில் கேட் கீப்பர் செய்த வேலை... கிலோமீட்டர் கணக்கில் நின்ற வாகனங்கள்!
உத்தரப் பிரதேசம் மாநிலம், அமேதியில் ரயில்வே ஊழியர் ஒருவரின் பொறுப்பற்ற செயலால், நள்ளிரவில் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் நடுரோட்டில் தவித்த சம்பவம் அமேதி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமேதி மாவட்டத்தில் உள்ள நிஹல்கர் ரயில் நிலையம் அருகே ஒரு ரயில்வே கேட் உள்ளது. இங்கு இரவு நேரப் பணியில் வீரேந்திரா என்ற ஊழியர் ஈடுபட்டிருந்தார். ஒரு ரயில் கடந்து செல்வதற்காக வீரேந்திரா கேட்டை மூடியுள்ளார். ஆனால் ரயில் சென்ற பிறகு கேட்டைத் திறக்க வேண்டிய அவர், குடிபோதையில் இருந்ததால் அப்படியே தூங்கிப் போயுள்ளார்.
नशे में धुत गेटकीपर ट्रेन गुजरने के बाद भी रेलवे फाटक नहीं खोल रहा था. मौके पर मौजूद लोगों ने स्टेशन मास्टर से शिकायत की. काफी ड्रामे के बाद फाटक खोला गया. मामला उत्तर प्रदेश के अमेठी का है. pic.twitter.com/xYYdMvhLd4
— The Lallantop (@TheLallantop) January 14, 2026
नशे में धुत गेटकीपर ट्रेन गुजरने के बाद भी रेलवे फाटक नहीं खोल रहा था. मौके पर मौजूद लोगों ने स्टेशन मास्टर से शिकायत की. काफी ड्रामे के बाद फाटक खोला गया. मामला उत्तर प्रदेश के अमेठी का है. pic.twitter.com/xYYdMvhLd4
— The Lallantop (@TheLallantop) January 14, 2026
ரயில் சென்று நீண்ட நேரமாகியும் கேட் திறக்கப்படாததால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் குவியத் தொடங்கின. சுமார் 1.5 மணி நேரத்திற்கும் மேலாக கேட் மூடப்பட்டிருந்ததால், ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு லாரிகள், கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் எனப் பல வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
காத்திருந்து பொறுமையிழந்த வாகன ஓட்டிகள் கீழே இறங்கிச் சென்று பார்த்த போது, கேட் கீப்பர் அறையில் வீரேந்திரா ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மக்கள் எழுப்ப முயன்றும் அவர் போதையில் எழுந்திருக்கவில்லை. உடனடியாக இது குறித்து ரயில் நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து மாற்று ஊழியர் மூலம் கேட்டைத் திறக்கச் செய்தனர். அதன் பின்னரே போக்குவரத்து சீரானது.
பாதுகாப்புப் பணியில் இருந்தபோது மது அருந்திவிட்டு அலட்சியமாகச் செயல்பட்டதற்காக, ஊழியர் வீரேந்திரா உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
