வைரலாகும் வீடியோ... ’ஆடி’ காரில் சென்று பால் விற்பனை செய்யும் இளைஞர்!

 
’ஆடி’ காரில் வீடு வீடாக பால் ஊற்றும் இளைஞர்

விலை உயர்ந்த ஆடி காரில் சென்று, பால் விற்பனை செய்யும் இளைஞரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹரியானா மாநிலத்தில் ஃபரிதாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் அமித் பதானா. இவர் பட்டப் படிப்பை முடித்த நிலையில் வங்கியில் நிலையான பதவியை பெற்றிருந்தார். வாகனங்கள் மீது அவருக்கு இருந்த காதலால் வங்கி வேலையை விட்டுவிட்டு சொகுசு காரான ஆடி மூலம் பால் விநியோகிக்கத் தொடங்கியுள்ளார்.

கார்ப்பரேட் வாழ்க்கை தனது ஆர்வமான வாகனக் காதலைத் தடுக்கின்றது என உணர்ந்த அவர் தனது குடும்பத்தின் பால் வியாபாரத்துடன் தனது வாகன ஆர்வத்தை இணைக்க முடிவு செய்து, முதலில் ஹார்லி-டேவிட்சன் பைக்கில் பால் விநியோகித்தை தொடங்கியுள்ளார்.  

இதனைத் தொடர்ந்து அமித் பதானாவின் பால் வணிகம் விரைவாக வளர்ச்சி பெற்றுள்ளது. வாடிக்கையாளர் அளவு அதிகரித்தவுடன், அவர் தனது போக்குவரத்து முறையையும் மேம்படுத்தியுள்ளார். இன்று சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடி காரில்   பால் விநியோகம் செய்கிறார். சமூக வலைதளங்களில்  ‘ஹார்லி வாலா துதியா’ என அழைக்கப்படும் அவர், பைக்கில் பால் விநியோகிக்கும் வீடியோவால் பரவலாக புகழ் பெற்றுள்ளார்.  

பால்

பல ஆண்டுகளாக அவரிடம் பால் வாங்கும் வாடிக்கையாளர்களும், அவரது வளர்ச்சியை பெருமையுடன் பதிவிட்டுள்ளனர். லட்சக்கணக்கில் மதிக்கக்கூடிய பைக்கில் பால் வழங்கினர். இன்று கோடிக்கணக்கில் மதிக்கக்கூடிய ஆடி காரில் அதே பணியை ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் தொடர்கின்றார். ஃபரிதாபாத் நகரில் அவரது ஆடம்பர பால் விநியோக சேவை தற்போது பெரும் உரையாடல் தலைப்பாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web