பகீர் வீடியோ... ஜப்பானில் பயங்கர சுனாமி... வடகொரியா, ரஷ்யாவிலும் சுனாமி எச்சரிக்கை!

 
சுனாமி

புது வருடத்தின் ஆரம்பமே பெரும் சோகமாக ஜப்பானில் அதிபயங்கர நிலநடுக்கமாக ரிக்டர் 7.5 அளவுக்கு ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கையும் இன்று காலையில் அறிவிக்கப்பட்டது. தற்போது ஜப்பானில் பயங்கர சுனாமி தாக்கிய நிலையில், வடகொரியாவிலும், ரஷ்யாவின் கிழக்குப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்துள்ளது 

முன்னதாக இன்று காலை ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திடீரென சுனாமி உருவான நிலையில், பொதுமக்களிடையே பரபரப்பும், அதிர்ச்சியும் உருவாகியுள்ளது.


வடக்கு, மத்திய ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டிலிருந்து வெளிவரும் செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இஷிகாவா, நிகட்டா மற்றும் டொயாமா ஆகிய கடலோரா மாகாண பகுதிகளுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட கடலோரப் பகுதிகளை விட்டு மக்கள் விரைவாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் 5 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்ப வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சுனாமி உருவானதால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். 5 மீட்டர் வரையிலான உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்த நிலையில், அருகில் இருந்த கார்களை எல்லாம் சுழற்றியடித்து நாசமாக்குகிற வீடியோ வைரலாகி வருகிறது. 

நிலநடுக்கம் ஜப்பான்

இந்நிலையில், வடகொரியா, ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் துவக்கத்திலேயே மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பயங்கர நிலநடுக்கம் டோக்கியோ மற்றும் கான்டோ பகுதிகளில் முழுவதும் உணரப்பட்டது. 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web