பகீர் வீடியோ... நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்... பறவை மோதியதால் விபரீதம்!

 
நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்
அமெரிக்காவில், நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் மீது பறவை மோதியதால் திடீரென தீப்பிடித்த எரிய துவங்கியது பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருந்து இண்டியானா மாகாணத்திற்கு சரக்கு விமானம் ஒன்று கிளம்பிச் சென்ற நிலையில், நடுவானில் விமானம் பறந்துக் கொண்டிருந்த போது திடீரென பறவை ஒன்று விமானத்தின் மீது மோதியது.

இதில் விமான என்ஜின் தீப்பிடித்து எரிய துவங்கிய நிலையில், உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெவார்க் ஏர்போர்ட்டில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, அங்கு ஏற்கெனவே உஷார்படுத்தப்பட்ட நிலையில் தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் விமானத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web