பகீர் வீடியோ... மாநகர காவல் ஆணையர் கார் மீது லாரி மோதி கோர விபத்து... அப்பளம் போல் நொறுங்கிய கார்!

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் திடீர் விபத்து ஏற்பட்டது. அந்த வகையில் மாநகர காவல் ஆணையரின் வாகனம் விபத்தில் சிக்கியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. பொன்னேரியில் ஆய்வுப் பணியை முடித்து விட்டு திரும்பிய போது போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்த காவல் ஆணையரின் கார் மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காவல் ஆணையரின் பாதுகாவலர் மாரி செல்வம் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் அப்பளம் போல நொறுங்கிவிட்ட நிலையில், காவல் ஆணையர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். காரின் கதவுகளை திறக்க முடியாததால் காவல் ஆணையர் காருக்குள்ளேயே சிக்கிவிட்டார்.
இதையடுத்து உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சக காவலர்கள் சேர்ந்து காரின் கண்ணாடியை உடைத்து காவல் ஆணையரை காரிலிருந்து மீட்கும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் விபத்துக்குள்ளான காட்சிகள் காரில் இருந்து காவல் ஆணையரை மீட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!