பகீர் வீடியோ... நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு... விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த போது ரசிகர்கள் ஆவேசம்!

 
விஜய்

வெளியே போ... என்று நடிகர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது, நடிகர் விஜய்க்கு எதிராக ரசிகர்கள் ஆவேசமாக கோஷமிட்டனர். ஒரு சில ரசிகர்கள் நடிகர் விஜய்யை நோக்கி செருப்புகளை வீசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

'கேப்டன்' என தமிழக மக்களால் அழைக்கப்பட்ட தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். அவரது மறைவு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் பெரும் திரளாக அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் கூட்டம் கூட்டமாக அவருக்கு அஞ்சலி செலுத்தினர். கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காரணமாக விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து தற்போது தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


இந்த நிலையில், நேற்று இரவு 10.30 மணியளவில், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் தேமுதிக அலுவலகம் வந்தார். விஜயகாந்த் உடலை பார்த்து கலங்கியபடி நின்று சில நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பிரேமலதாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததால் அவரால் தன்னுடைய காருக்கு செல்ல முடியவில்லை. போலீஸார், பவுன்சர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றபோது சிலர் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடிவந்து சூழ்ந்துகொண்டனர்.

விஜய்

அவர் காரில் ஏறச் சென்றபோது எங்கிருந்தோ இரண்டு செருப்புகள் அடுத்தடுத்து விஜய்யை நோக்கி பறந்து வந்தன. ஆனால் அவை விஜய்யின் மீது படவில்லை. ஒரு செருப்பை விஜய்யின் அருகே நின்றுகொண்டிருந்த ஒருவர் கைகளால் பிடித்து வந்த திசையில் தூக்கி வீசினார்.

இது தொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. செருப்பை வீசியது யார் என்பது குறித்து வீடியோவில் பதிவாகவில்லை. செருப்புகள் வேண்டுமென்றே வீசப்பட்டனவா? அல்லது தவறுதலாக வந்துவிழுந்ததா என்று தெரியவில்லை. எனினும் பலரும் இந்த சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!