பகீர் வீடியோ... மாணவிகளின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கிய மாணவர்கள்!

 
சண்டை தகராறு தாக்குதல்

மகா சிவராத்திரி தினத்தன்று அசைவ உணவு சாப்பிட்டது தொடர்பான தகராறில் மாணவிகளின் தலைமுடியை பிடித்து இழுத்து மாணவர்கள் பயங்கர தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

பிப்ரவரி 26ம் தேதி இந்தியா முழுவதும் மஹாசிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் டெல்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தில் மகா சிவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின்  போது மாமிசம் சாப்பிட்டது தொடர்பாக மாணவர்கள் குழுக்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதாவது இடதுசாரி மாணவர் அமைப்பான SFI மற்றும் வலதுசாரி மாணவர் அமைப்பான ‌ ABVP உறுப்பினர்களிடையே பெரும் மோதல் வெடித்தது. இதில் ஏபிவிபி மாணவர்கள் சிவராத்திரி பண்டிகை என்பதால் யாரும் அசைவ உணவு சமைக்க கூடாது மற்றும் சாப்பிடக்கூடாது என அறிவித்தனர்.  

இதனை மீறி எஸ்எஃப்ஐ மாணவர் அமைப்பினர் அசைவம் சாப்பிட்டதால் அவர்களை அடித்து தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு அவர்களும் தாக்கியுள்ள நிலையில் இது குறித்து  எஸ்எப்ஐ மாணவர் அமைப்பினர் அறிக்கை வெளியிட்டனர். அதில், அந்த அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவிகளின் தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்குதல் நடத்தினர் .  அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web