பகீர் வீடியோ... நம்பி மோசம் போன விபரீதம்... வழுக்கை தலையில் லோஷன் ... தலைவலி, சருமக்கோளாறுகளுடன் மருத்துவமனையில் அனுமதி!

 
வழுக்கை தலையில் லோஷன்
ஹைதராபாத் நகரில்  சந்துலால் பாராதரி பகுதியில், தலை முடி வளர சலூன் கடை ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இங்கு  வழுக்கை உள்ள ஆண்களுக்கு சலூன் ஊழியர் வக்கீல் சல்மானி என்ற ஒருவர் வெள்ளை நிற லோஷனைத் தேய்த்து முடி வளர வைப்பதாக விளம்பரம் செய்துள்ளார். இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபதே தார்வாஜா சாலையில் உள்ள பிக் பாஸ் சலூனில் வேலை பார்த்து வந்த வக்கீல், முதலில் வாடிக்கையாளர்களின் தலை முடியை முழுமையாக வெட்டிய பின், ஒரு வெள்ளை நிற லோஷனை அவர்களது தலைகளில் தேய்த்து, 3  நாட்களுக்கு சாம்பு, சோப் மற்றும் எண்ணெய் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.  

இதனை அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் பிரசாரம் செய்ததால், ஏராளமான ஆண்கள் ஹைதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவரை பார்ப்பதற்காக வந்த வண்ணம் இருந்தனர்.  தினமும்  100 முதல் 150 பேர் வரை வருவதால் சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு, வக்கீல் அருகிலுள்ள ஒரு திறந்த இடத்தில் தற்காலிகமாக கூடாரம் அமைத்து, லோஷன் தேய்க்கும் பணியை மேற்கொண்டு வந்தார்.  தலை முடியை அகற்ற ரூ.100 வசூலித்த அவர், “லோஷனுக்கு பணம் பெற்றால் அது வேலை செய்யாது” என கூறி இலவசமாக தேய்ப்பதாக விளம்பரம் செய்திருந்தார்.
இந்நிலையில், அந்த லோஷனை பயன்படுத்திய சிலர் தலைவலியுடன் மற்றும் சருமக் கோளாறுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.   வக்கீல் உடனடியாக  தனது கடையை மூடிவிட்டு, தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது.  இது குறித்து  இதுவரை அதிகாரப்பூர்வ புகாரொன்றும் பெறவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web