வீடியோ... சவாரியிடம் பேரம் பேச முடியல... பைக் டாக்ஸி ஓட்டி வந்த இளைஞரின் செல்போனை பிடுங்கி உடைந்த ஆட்டோ டிரைவர்!

நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் டாக்ஸி சேவைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பைக் டாக்ஸி சேவையில் இளைஞர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வேலை தேடும் இளைஞர்கள் பலரும் இதன்மூலம் தங்கள் தேவைக்கு வருவாய் சேர்த்து வருகின்றனர்.
ஓலா, உபர், ரேபிடோ போன்ற நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பைக் டாக்ஸி சேவையில் பயண சலுகை, ஓட்டுநர்களுக்கான சலுகைகளை அறிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடு, ஆட்டோ, கார் போன்றவற்றின் சேவைகள் குறைவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஆங்காங்கே எழுந்துள்ளது.
மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள், தங்களுக்கு பைக் டாக்ஸியால் வருவாய் இழப்பு ஏற்படுவதாக வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்த இந்தநிலையில், பெங்களூருவில் பைக் டாக்ஸி ஓட்டிய இளைஞர் அங்குள்ள ஆட்டோ ஓட்டுநரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவில் அந்த இளைஞரின் செல்போனை பறித்து கீழே போட்டு உடைக்கிறார்.
Strict action should be taken against this auto driver under the law.
— freedom of speech B,lore (@freedomlore1) March 5, 2023
Is there no such thing as law in Bangalore City?@BlrCityPolice @BlrCityPolice @CPBlr @tv9kannada pic.twitter.com/Uaa4Am9OPV
வேறு மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பைக் டாக்ஸிகளை மகிழ்ச்சியுடன் இயக்குகின்றனர். ஆனால் இங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறோம் என வேதனையை தெரிவித்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் ஆட்டோ ஓட்டுநர் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பெங்களூரு மாநகர காவல்துறை இந்திரா நகர் போலீசில் இந்த வீடியோ குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பலரும் ஆட்டோ ஓட்டுநருக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநர் கூறுவது உண்மைதான், இங்குள்ள அவர்கள் அந்த தொழிலை மட்டுமே நம்பி குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர் இங்கு எப்படி பைக் டாக்ஸி ஓட்டுகிறார். அவருக்கு யார் பைக் கொடுத்தது? ஓட்டுநர் உரிமம் இங்கு எப்படி எடுத்தார்? பல கேள்விகளை முன்வைக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க