அலறல் சத்தத்தால் அதிர்ந்த கிராமம்.. கள்ளக்காதலியை தீ வைத்து எரித்துகொன்ற இளைஞர்!

 
பிரேமா

திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே பாப்பினி- வரதப்பம்பாளையம் பகுதியில் செந்தில் - பிரேமா (30) தம்பதி வசித்து வந்தனர். இவா்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக பிரேமா தனது கணவரைப் பிரிந்து அதே ஊரில் தனி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

மேலும் பிரேமா அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், பிரேமாவுக்கும், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் பகுதியைச் சோ்ந்த விஜய் (26) என்ற இளைஞருக்கும்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நெருக்கமாகி கள்ளக்காதலாக மாறியது.

பிரேமா

இந்நிலையில்,  பிரேமாவை சந்திக்க அவரது வீட்டுக்கு விஜய் வந்துள்ளார். அப்போது திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் விஜய் அங்கிருந்து சென்றார். அடுத்த நிமிடமே வீட்டில் பிரேமாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து பார்த்தனர். அப்போது, பிரேமா உடலில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அவரை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உடல் முழுவதும் தீவிர தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிரேமா மேல் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். எனினும் அங்கு உயிரிழந்தார். இறப்பதற்கு முன் போலீசாரிடம் பிரேமா அளித்த மரண வாக்குமூலத்தில், விஜய்தான் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

பிரேமா

பின்னர் இளைஞர் விஜயை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினா். அப்போது, விஜய், பிரேமா ஆகியோர் பழகி வந்த நாள்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பிரேமா பரப்பியுள்ளார். இதனை வீட்டுக்கு சென்று கேட்டபோது தகராறு ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த விஜய் பிரேமாவை எரித்துக் கொல்ல முயற்சி செய்தது தெரியவந்தது.

ஆனால் விஜய், போலீசாரிடம், தான் மண்ணெண்ணெய் ஊற்றி பிரேமாவுக்கு தீ வைக்கவில்லை என்றும், பிரேமாவே தீக்குளித்து இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜய்யை சிறையில் அடைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web