15 மணி நேர உழைப்புக்கு ரூ.763 தான் ஊதியம்... விவாதத்தை கிளப்பிய பிளிங்கிட் ஊழியர்!

 
பிளிங்க் இட்
 

இந்தியாவில் உணவு மற்றும் பொருள் விநியோகத் துறையில் கிக் தொழிலாளர்களின் ஊதியம் குறித்த விவாதத்தை, உத்தரகண்டைச் சேர்ந்த பிளிங்கிட் விநியோக ஊழியர் ஒருவரின் காணொலி தீவிரப்படுத்தியுள்ளது. தாப்ளியால் ஜி என்ற அந்த ஊழியர், 15 மணி நேரம் வேலை செய்து 28 விநியோகங்களை முடித்தும் ரூ.763 மட்டுமே சம்பாதித்ததாக இன்ஸ்டாகிராம் ரீலில் கூறியுள்ளார். கடைசி விநியோகத்திற்குக் கிடைத்தது ரூ.15.83 மட்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக ரூ.52 தான் வருமானம் கிடைப்பதாக, செயலியின் திரைப் பதிவுகளுடன் அவர் விளக்கினார். கிக் வேலை எவ்வளவு நிலையற்றது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதிக ஆர்டர்கள் வரும் நாட்களில் ரூ.1600 முதல் ரூ.2000 வரை கிடைக்கும் என்றும், தேவை குறையும் நாட்களில் ரூ.1000 சம்பாதிப்பதே சிரமம் என்றும் குறிப்பிட்டார்.

இந்த காணொலி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும், ஆயிரக்கணக்கான கருத்துகளையும் பெற்றுள்ளது. விநியோக ஊழியர்களின் ஊதியம் மற்றும் பாதுகாப்பு குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர். “இது மலிவான மனித உழைப்புச் சுரண்டல்” என்றும், “நியாயமான ஊதியம் வழங்குங்கள்” என்றும் வலைதளவாசிகள் பிளிங்கிட் நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!