தக்காளி கிலோ ரூ.6 பறிக்கிற கூலியும் மிஞ்சாது.. கதறும் விவசாயிகள்!

 
கிலோ 6 ரூபாய்!! பறிக்கிற கூலியும் மிஞ்சாது!! சாலையில் கொட்டப்படும் தக்காளி!

தமிழகத்தில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்து இருப்பதால் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால், விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். செடிகளில் இருந்து தக்காளியைப் பறிப்பதற்கு கொடுக்கிற கூலிக்கு கூட பணம் கிடைக்காததால், பல விவசாயிகள் செடிகளிலேயே தக்காளியைப் பறிக்காமல் விட்டு விடுகின்ற சோகம் தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. 

சென்னையை பொறுத்தவரை, கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து, தினசரி சுமார் ஆயிரத்து 100 டன் தக்காளி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. ஒரு சமயத்தில் தக்காளியின் விலை கிலோ ரூ.100யைத் தொட்ட காலங்கள் எல்லாம் உள்ளன. இந்நிலையில், கிலோ ரூ.6க்கு குறைந்துள்ளது. 

தக்காளி விலை உயர்வு

தற்போது தக்காளி கூடுதலாக, ஆயிரத்து 400 டன் முதல் ஆயிரத்து 500 டன்கள் வந்துள்ளன. தக்காளிகளின் வரத்து அதிகரித்துள்ளதால், விலையும் கடுமையாக சரிந்துள்ளது. நேற்றைய விலை நிலவரப்படி  ஒரு கிலோ தக்காளி, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தக்காளியின் விலை மேலும் சரியக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று மேலும் விலை குறைந்து கிலோ ரூ.6க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி போடறவங்களுக்கு 1கிலோ தக்காளி இலவசம்!

நேற்று 15 கிலோ பெட்டி 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று வெறும் 100 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. தக்காளியின் வரத்து அதிகரிப்பால், விலை கடும் சரிவை சந்தித்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விலை சரிவு  இல்லத்தரசிகள் மத்தியில் பெரும்  வரவேற்பை பெற்றிருந்தாலும், விவசாயிகள் இந்த விலை குறைவினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web