“திருமணம் ரத்து செய்யப்பட்டது... வேற எதையும் கேட்காதீங்க” - ஸ்மிருதி மந்தனா அறிவிப்பு!

 
ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், நட்சத்திர வீராங்கனையுமான ஸ்மிருதி மந்தனாவுக்கும், பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலுக்கும் நடக்க இருந்த திருமணம், தொடர் சர்ச்சைகள் மற்றும் உடல்நலக் குறைபாடுகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்மிருதி மந்தனா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

மந்தனா - பலாஷ் முச்சால் இருவருக்கும் கடந்த நவம்பர் 23ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் சாங்லியில் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முந்தைய சடங்குகளும், மெஹந்தி விழாவும் நடைபெற்ற நிலையில், திருமணம் திடீரெனத் தள்ளிவைக்கப்பட்டது. திருமண நாள் அன்று மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தந்தை பூரண குணமடைந்த பின்னரே திருமணம் என்று மந்தனா அறிவித்ததால், திருமணம் காலவரையின்றித் தள்ளிவைக்கப்பட்டது.

ஸ்மிருதி  மந்தனா

இதற்கிடையே, தந்தையின் உடல்நலக் குறைவால் அழுது கொண்டிருந்த பலாஷ் முச்சாலுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலாஷ் முச்சால் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் பரவி, முச்சலின் 'துரோகம்'தான் திருமணம் ரத்துக்கான உண்மைக் காரணம் எனச் சர்ச்சை வெடித்தது. இந்தச் சூழலில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சாலுடன் இருந்த காதல் வீடியோக்கள் மற்றும் திருமண கொண்டாட்டப் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி விட்டார்.

ஸ்மிருதி  மந்தனா

இதையடுத்து ஸ்மிருதி மந்தனா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "கடந்த சில வாரங்களாக என் வாழ்க்கையைப் பற்றி ஏராளமான ஊகங்கள் எழுந்துள்ளன. எனது திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த விஷயம் முடிந்துவிட்டது. இந்த நேரத்தில் இரு குடும்பங்களின் தனியுரிமையையும் மதித்து, நாங்கள் முன்னேற எங்களுக்கு இடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முடிந்தவரை நீண்ட காலம் இந்தியாவுக்காக விளையாடி கோப்பைகளை வெல்வேன் என்று நம்புகிறேன். அங்குதான் எனது கவனம் என்றென்றும் இருக்கும். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி. முன்னேற வேண்டிய நேரம் இது," என்று பதிவிட்டு, திருமண ரத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!