அரங்கமே அதிர்ந்தது... பிரபல பாடகரை திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ரசிகை!

 
ஜின்
இசைக்குழுவினரின் இசையை ரசிக்க ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்த நிலையில், மொத்த அரங்கமும் ஒரு நிமிடம் ரசிகை ஒருவரின் செயலால் அதிர்ந்து உறைந்து போனது. பிரபல பாடகர் ஜின் மேடையில் பாடிக் கொண்டிருக்கையில், மேடையில் திடீரென ஏறிய ரசிகை ஒருவர் ஜின்னைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு பரபரப்பைக் கிளப்பினார்.

இந்நிலையில், பாடகரை முத்தமிட்டு கட்டிப்பிடித்த ரசிகை மீது அதே விழாவில் பங்கேற்ற மற்றொரு ரசிகை பொறாமையில் காவல் நிலையத்தில் புகாரளிக்க, உடனடியாக முத்தமிட்ட ரசிகை மீது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. 

தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் உள்ளனர்.

ஜின்

இந்த சூழலில், தென் கொரியாவில் 18வயதிற்கு மேற்பட்ட அனைவரும் 18 மாத கட்டாயம் ராணுவ பயற்சி மேற்கொள்ள வேண்டும். அதன்படி கடந்த ஆண்டு ஜின் இந்த ராணுவ பயிற்சியை முடித்தார். இதனையடுத்து, அவர் ரசிகர்களை சந்திப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திடீரென பெண் ரசிகை ஒருவர் அவர் பக்கத்தில் சென்று, கட்டிப்பிடித்து அவருக்கு முத்தம் கொடுத்தார். இது தொடர்பாக மற்றொரு ரசிகை கிரிமினல் புகார் தொடர்ந்ததை அடுத்து, முத்தமிட்ட ரசிகை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜின்

அதன் அடிப்படையில் அந்த பெண் யார் என்று தேடிய போது, அவர் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் என கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவர்  மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?