விவாகரத்து கேட்ட மனைவி... 2 குழந்தைகளைக் கொன்று தந்தை தற்கொலை!

 
தற்கொலை

தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டத்தில் நடந்துள்ள இந்த மிகச்சோகமான சம்பவம், குடும்பப் பிளவுகள் மற்றும் மன அழுத்தம் எந்த அளவிற்கு ஒரு மனிதனை நிலைகுலையச் செய்யும் என்பதற்கு ஒரு கோரமான உதாரணமாக மாறியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டத்தில் விவாகரத்து பெற்றுப் பிரிந்து சென்ற மனைவியின் மீதான விரக்தியாலும், குழந்தைகளைப் பராமரிக்க முடியாத சூழலாலும் ஒரு தந்தை தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது.

பள்ளி மானவி தற்கொலை

மரிகல் மண்டலம் தீலேர் கிராமத்தைச் சேர்ந்த சிவராமுலு (32) மற்றும் சுஜாதா (28) தம்பதியினரிடையே கடந்த 9 ஆண்டுகளாகத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்குப் பிறகு ரித்திகா (8), சைதன்யா (6) ஆகிய இரு குழந்தைகளும் தந்தை சிவராமுலுவின் பராமரிப்பிலேயே வளர்ந்து வந்தனர். மனைவியின் பிரிவும், குழந்தைகளை ஒருவராகப் பராமரிப்பதில் இருந்த சவால்களும் சிவராமுலுவை கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதி குழந்தைகளைத் தனது விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்ற சிவராமுலு, அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொன்றுள்ளார். பின்னர் பிணங்களை அருகில் உள்ள ஏரியில் வீசியுள்ளார்.

குழந்தைகளைக் கொன்ற பின், சிவராமுலு பூச்சி மருந்தைக் குடித்ததோடு, பிளேடால் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஏரியிலிருந்து குழந்தைகளின் உடல்களை மீட்டனர். சிவராமுலுவின் உடல் விவசாய நிலத்திலேயே கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!