பகீர்!! காதல் கணவனை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி!!

 
சந்தியா

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகே என் தட்டத்தில் கிராமத்தில் கந்தன் - சந்தியா தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கந்தனின் மனைவி சந்தியாவிற்கும் அதே பகுதியை சேர்ந்த சிவசக்தி என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

நீண்டகாலமாக இந்த கள்ளக்காதலின் தனிமை சந்திப்பு தொடர்ந்துள்ளது. இனால் சந்தியா - சிவசக்தி கள்ளக்காதல் குறித்து ஊருக்குள் பேசத்தொடங்கினர். இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், அவரது செல்போனை ஆய்வு செய்தார். அதில் சக்தியும், சந்தியாவும் அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது. இதனை கண்டு ஆத்திரமடைந்த கந்தன், மனைவியை கண்டித்துள்ளார். 

சந்தியா

எனினும், இதனை கண்டுகொள்ளாத சந்தியா சக்தியுடன் தொடர்பிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கந்தன்தான் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். வழக்கம் போல் கணவர் வேலைக்கு சென்று விட்டபிறகு வீட்டிற்கு சிவசக்தி நுழைந்துவிட்டார். 

இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்த நிலையில், இரவு 11 மணியளவில் கந்தன் வீடு திரும்பியுள்ளார். இருவரும் வீட்டில் இருப்பதை கண்ட  கந்தனுக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறியது. உடனே சந்தியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதும் சந்தியாவும், சிவசக்தியும் ஒன்றாக சேர்ந்து கந்தன் கண்ணில் மிளகாய் பொடியை தூவி பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த கந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் கணவர் வழுக்கி விழுந்ததாக கூறி அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார். உதவிக்கு கணவரின் நண்பன் வசந்த் என்பரை அழைத்துள்ளார். அங்கு கந்தனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

சந்தியா

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வசந்த் நண்பரின் மனைவியுடன் சிவசக்தி இருப்பதால் சந்தேகம் அடைந்தார். கள்ளக்காதல் விவகாரம் அவருக்கும் தெரிந்ததால், வசந்த் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து போலீசார் இருவரையும் அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை மிளகாய் பொடி தூவி கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!