போனில் வந்த சகோதரரின் மரணச் செய்தி.. துக்கத்தை அடக்கிக்கொண்டு பணிபுரிந்த ரேஷன் கடை ஊழியர்..!!

 
லீமா

அண்ணன் இறந்த செய்தி கேட்டும் கடமை தவறாமல் தனது வேலையை முடித்த ரேஷன் கடை பெண் ஊழியர்...

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ இனிப்பு அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதை ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழங்குகின்றனர். 

இந்நிலையில், அண்ணன் இறந்த செய்தி கேட்டு ரேஷன் கடை பெண் ஊழியர் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொட்டலம் வழங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியது. 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள ரேஷன் கடையில் எழுத்தராக பணிபுரிந்து வருபவர் லீமா. ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகம் செய்து கொண்டிருந்தார் லீமா. அப்போது அண்ணன் இறந்த செய்தி செல்போனில் வந்தது. அதன்பின், அதிர்ச்சியடைந்த லீமா, அனைத்து பொதுமக்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிவிட்டு கண்ணீரைத் துடைத்துவிட்டு, அதிகாரிகளிடம் கணக்குகளை ஒப்படைத்துவிட்டு வெளியேறினார்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web