சந்திரனை அடைந்த உலகின் முதல் தனியார் விண்கலம்... சிலிர்ப்பூட்டும் நிலவின் மேற்பரப்பு காட்சிகள்.!

 
நிலா
 அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனம் ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1  மார்ச் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தற்போது  நிலாவில் ப்ளூ கோஸ்ட் லூனார் லேண்டர் தரையிறங்கிய சிலிர்க்க வைக்கும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.நிலாவின் மேற்பரப்பில் நீண்டகால மனிதர்கள் அதிக நேரம் தங்க நாசா முன்னெடுக்கும் முயற்சிகளில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இது குறித்து வெளியான  வீடியோவில், இதுவரை இல்லாத அளவிற்கு நிலாவின் மேற்பரப்பை மிகத் துல்லியமாகக் காண முடிகிறது. நிலவின் மேர் கிரிசியம் பகுதியில் உள்ள ஒரு பழங்கால எரிமலையின் சரிவுகளில் லேண்டர் தரையிறங்கியது.


இதனை பார்க்கும்போது  இன்னும் கொஞ்ச காலத்தில் மனிதன் நிலாவில் வாழ தொடங்கி விடுவான் போல, அந்த அளவுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில், நிலாவை அடைய அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது.படிப்படியாக மற்ற நாடுகளும் நிலாவை அடைய வேண்டும் என்று கனவு கண்டன. அந்த வரிசையில், இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் இதில் வெற்றி பெற்றன. இப்போது தனியார் நிறுவனங்களும் சந்திரனை அடைய வேண்டும் என்று கனவு காணத் தொடங்கி வெற்றி பெறுகிறார்கள்.
அமெரிக்க தனியார் நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸுக்கு முன்பு, பல தனியார் நிறுவனங்களுடன் இனைந்து சில நாடுகள் கூட இதைச் செய்ய முயற்சி செய்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.  இப்போது இந்தப் பணியை முடிப்பதன் மூலம், ப்ளூ கோஸ்ட் வரலாற்று சாதனையை  படைத்தது மட்டுமல்லாமல், நாசாவிற்கு ஒரு முக்கியமான பணியையும் செய்துள்ளது.லேண்டரில் பத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிசோதனைகளை வழங்குவதற்காக நாசா $101 மில்லியன் வழங்கியுள்ளது. மேலும் உபகரணங்களுக்காக கூடுதலாக $44 மில்லியன் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ப்ளூகோஸ்ட்


ப்ளூ கோஸ்ட் மொத்தம் 10 இயந்திரங்களைக் கொண்டுள்ளது. அவை நிலவின் வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் சந்திர மண் பகுப்பாய்வி, கதிர்வீச்சு சகிப்புத்தன்மை கணினி மற்றும் சந்திரனில் வழிசெலுத்தலுக்கு தற்போதுள்ள உலகளாவிய செயற்கைக்கோள் வழிசெலுத்தல், அமைப்பைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை சோதிக்கும் ஒரு பரிசோதனை ஆகியவை அடங்கும்.
AFP தகவலின்படி, ப்ளூ கோஸ்ட் சந்திர சூரிய அஸ்தமனங்களைப் பதிவு செய்யும், சூரிய கதிர்வீச்சின் கீழ் மேற்பரப்பில் இருந்து தூசி எவ்வாறு எழுகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவும். இது முதலில் அப்பல்லோ விண்வெளி வீரர் யூஜின் செர்னனால் கவனிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 ப்ளூ கோஸ்டை நிலவுக்கு அனுப்புவதன் மூலம், ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸ், எந்த விபத்தும் இல்லாமல் சந்திரனை அடைந்த விண்கலத்தை உலகின் முதல் தனியார் நிறுவனமாக மாறியுள்ளது. தரையிறங்கிய 30 நிமிடங்களுக்குப் பிறகு, ப்ளூ கோஸ்ட் சந்திர மேற்பரப்பில் இருந்து படங்களை அனுப்பத் தொடங்கியது. முதல் புகைப்படம் சூரியனின் ஒளியால் ஓரளவு மறைக்கப்பட்ட ஒரு செல்ஃபி. 2வது புகைப்படத்தில், விண்வெளியின் கருப்பு வானத்தில் ஒரு நீலப் புள்ளி போலத் தோன்றிய பூமியைக் காண முடிந்தது. இந்த பணி 2 வாரங்கள் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web