உலகின் மிக அதிக வயதான பெண் காலமானார் !

 
இனாஹ் கனாபாரோ
 


உலகின் மிக அதிக வயதான பெண் இனாஹ் கனாபாரோ தனது 116 வயதில் காலமானார்.  பிரேசில் நாட்டைச் சேர்ந்த இனாஹ் கனாபாரோ லுகாஸ் தான் உலகின் மிக மிக வயதான பெண்மணியாக இருந்து வந்தார்.

இவர்  1908-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிறந்து  1934ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாக துறவு பூண்டார். இந்நிலையில் இனாஹ் கனாபாரோ தனது 116 வயதில் காலமானார்.  

இனாஹ் கனாபாரோ

ஏப்ரல் 30 இனாஹ் கனாபாரோ உடல்நலக்குறைவு காரணமாக இறந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இனாஹ் கனாபாரோ மறைவுக்குப் பிறகு, உலகின் அதிக வயதான பெண் என்ற பட்டம், இங்கிலாந்தின் சர்ரேயைச் சேர்ந்த 115 வயதான எதெல் கேட்டர்ஹாமுக்குச் சென்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web