உலகின் முதல் '600 பில்லியன் டாலர்' மனிதர்... 58 லட்சம் கோடியுடன் எலான் மஸ்க் முதலிடம்!

 
எலான் மஸ்க்

உலகின் பெரும் செல்வந்தரும், நவீனத் தொழில்நுட்ப உலகின் முகமுமான எலான் மஸ்க், நிதி வரலாற்றில் இதுவரை எவரும் எட்டாத ஒரு இமாலயச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். உலகப் பணக்காரர்கள் வரிசையில் 600 பில்லியன் டாலர் (சுமார் ₹50 லட்சம் கோடி) என்ற மைல்கல்லைத் தாண்டிய முதல் தனிநபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். நேற்றைய நிலவரப்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு 638 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் 58 லட்சம் கோடி ரூபாய் ஆகும். 2020-ஆம் ஆண்டில் வெறும் 24 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு, ஐந்தே ஆண்டுகளில் இந்த அசாத்திய வளர்ச்சியை எட்டியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

எலான் மஸ்க்

இந்த விஸ்வரூப வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' (SpaceX). இந்த நிறுவனம் விரைவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட (IPO) உள்ள நிலையில், அதன் மதிப்பு சுமார் 800 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில் மஸ்க்கிற்கு சுமார் 42 சதவீதப் பங்குகள் இருப்பதால், அவரது நிகரச் சொத்து மதிப்பு ஒரே நாளில் தாறுமாறாக எகிறியது. மேலும், அவரது எலக்ட்ரிக் கார் நிறுவனமான 'டெஸ்லா' மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான 'எக்ஸ் ஏ.ஐ' (xAI) ஆகியவற்றின் பங்குகளும் தொடர்ந்து வலுவான நிலையில் இருப்பது மஸ்க்கின் செல்வத்தைப் பல மடங்காக உயர்த்தியுள்ளது.

எலான் மஸ்க், பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நெருங்கிய நட்பு கொண்டுள்ள எலான் மஸ்க், அந்நாட்டின் புதிய அரசின் சிறப்பு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். அரசியல் செல்வாக்கு ஒருபுறம் இருந்தாலும், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் ரோபாட்டிக்ஸ் துறையில் அவர் மேற்கொண்டு வரும் புரட்சிகரமான மாற்றங்களே அவரை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளன. தற்போதைய வேகத்தைப் பார்த்தால், இன்னும் சில ஆண்டுகளில் உலகின் முதல் 'ட்ரில்லியனர்' (Trillionaire) - அதாவது ஒரு லட்சம் கோடி டாலர் சொத்து மதிப்பு கொண்ட மனிதர் என்ற இலக்கையும் எலான் மஸ்க் எளிதில் எட்டிவிடுவார் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!