வைரல் வீடியோ!! நடுவானில் வெடித்து சிதறிய உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ராக்கெட்!!

 
எலான்

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம் ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஸ்டார்ஷிப் ராக்கெட் 394-அடி (120-மீட்டர்) உயரத்துடன் 33 என்ஜின்களை கொண்டது. உலகிலேயே இதுவரை கட்டப்படாத மிக சக்திவாய்ந்த ராக்கெட் ஆக ஸ்பேஸ்க்எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் கருதப்படுகிறது.

இதன் மூலம் பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இதனை விண்வெளிக்கு அனுப்ப கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி திட்டமிடப்பட்டு பின் பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (ஏப்.20) திட்டமிட்டபடி விண்ணில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

இதன்படி தெற்கு டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸிற்கு சொந்தமான ஏவதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது விண்ணில் சீறிபாய்ந்த சென்ற நிலையில் நடுவானில் வெடித்துச் சிதறியது. அதாவது ஸ்டார்ஷிப் விண்கலன், மூன்று நிமிட பயணத்துக்குப் பிறகு முதல்-நிலை ராக்கெட் பூஸ்டரில் இருந்து பிரிய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி அந்த பிரியும் நடவடிக்கை கைகூடாமல் ராக்கெட் வெடித்தது.

எலான்

ராக்கெட் வெடித்துச் சிதறிய சில நிமிடங்களில், இந்த சோதனை போதுமான அளவு உற்சாகமளிக்காதது போல, ராக்கெட் பிரிப்புக்கு முன்பே திட்டமிடப்படாத நிலையை அனுபவித்தது. என்று ஸ்பேஸ்எக்ஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. இந்த முழு சோதனையும் நிறைவடையாமல் போனாலும் தமது முயற்சி வெற்றி பெற்றதாக ஸ்பேஸ்எக்ஸ் அறிவித்தது.
இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web