உலகின் ஒரே 'பெண் வடிவ' அனுமன் கோவில்.. எங்கிருக்கிறது? எப்படி செல்வது?
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் அருகே உள்ள ரத்தன்பூர் என்ற இடத்தில், அனுமன் பெண் ரூபத்தில் அருள்பாலிக்கும் இந்தத் தனித்துவமான கோவில் அமைந்துள்ளது.

ரத்தன்பூர் பகுதியை ஆண்டு வந்த பிருத்வி தேவ்ஜு என்ற மன்னர் தீராத உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தார். ஒருமுறை அவரது கனவில் தோன்றிய அனுமன், அருகே இருக்கும் மகா மாயா நீர்த்தேக்கத்தில் தனது சிலை இருப்பதாகவும், அதை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யும்படியும் கூறியுள்ளார். அனுமன் சொன்ன இடத்திற்குச் சென்று தேடியபோது, அங்கு அனுமனின் சிலை பெண் வடிவில் (மாதா அனுமன்) இருப்பதைக் கண்டு மன்னர் வியப்படைந்தார். இருப்பினும், அனுமனின் கட்டளைப்படி அந்தச் சிலையையே அங்கு பிரதிஷ்டை செய்து கோவிலைக் கட்டினார்.

சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பிறகு, மன்னரின் உடல்நலம் தேறியதாகவும், அவரது தீராத நோய் குணமாகியதாகவும் தல வரலாறு கூறுகிறது.
இந்தச் சிலையில் அனுமன் பெண் ரூபத்தில் அமர்ந்துள்ளார். அவரது ஒரு கையில் கதை (Gada) உள்ளது, மற்றொரு கை ஆசி வழங்கும் முத்திரையில் உள்ளது. இந்தச் சிலையைத் தரிசிப்பதால் தீராத நோய்கள் நீங்கும் என்பதும், கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
