எக்ஸ் (ட்விட்டர்) தளம் நாடு முழுவதும் திடீரென முடங்கியது... பயனர்கள் தவிப்பு!

இன்று மார்ச் 10ம் தேதி மாலை 3 மணியளவில் எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியது. எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்ட நிலையில் பயனர்கள் தவித்து, தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர். எனினும், சுமார் 30 நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் வலைதளம் சீரானது.
எக்ஸ் தளத்துக்குப் போட்டியாக இருக்கும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்கள் அவ்வப்போது முடங்கிப் போவதை காண முடிகிறது. இந்த நிலையில், பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளம் அண்மைக் காலங்களில் தொழில்நுட்ப கோளாறுகளாலோ அல்லது பிற காரணங்களாலோ முடங்கப்படாத நிலையில், இன்று திடீரென முடங்கியுள்ளது.
இதனால் இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளிலும் எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாமல் பயனர்கள் தவித்தனர். இந்நிலையில், எக்ஸ் தளம் திடீரென முடங்க என்ன காரணம்? என்பதற்கு எலான் மஸ்க்குக்கு சொந்தமான மேற்கண்ட நிறுவனத்தின் தரப்பிலிருந்து இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!