சிறுத்தையின் கால்களை கட்டி பைக்கில் தூக்கி வந்த இளைஞர்!!

 
சிறுத்தை

கர்நாடக மாநிலம் ஹாசன் பாகிவாலு  கிராமத்தில் வசித்து வருபவர் முத்து வேணுகோபால். இவர் நேற்று ஜூலை 14ம் தேதி  வெள்ளிக்கிழமை காலை வயல்வெளிக்குசென்ற போது அங்கு சிறுத்தை ஒன்று இவரை தாக்க தொடங்கியது. சிறுத்தையிடமிருந்து தப்பிக்க  அந்த சிறுத்தையை தாக்கி அதன் கால்களை கயிற்றால் கட்டிவிட்டார்.  இதனால் சிறுத்தையால் நகர முடியவில்லை.

சிறுத்தை

இதையடுத்து அவர் சிறுத்தையை தனது பைக்கின் பின்பகுதியில் கட்டி தொங்கவிட்டபடி கிராமத்துக்கு சென்றார். சிறுத்தையுடன் அவர் செல்வதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கிராமத்து மக்களிடம் தனக்கு  நடந்த சம்பவத்தை வேணுகோபால் விளக்கி கூறினார். இதையடுத்து சிறுத்தை தாக்குதலில் காயம் அடைந்ததால்  அவருக்கு கிராம மக்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறுத்தை

பின்னர், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.  வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வனவிலங்குகளை தாக்குவது குற்றம் என்றாலும், தற்காப்புக்காக அந்த இளைஞர் தாக்கியது குற்றமாகாது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிறுத்தை தாக்கிய அந்த இளைஞரும் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web