பயங்கரம்... யூடியூப் பார்த்து உறவினர்களிடம் ஐடியா கேட்டு பங்காளியை தீர்த்து கட்டிய இளைஞர்!

 
சபரி


தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டப்பட்டியில் வசித்து வருபவர் கோவிந்தசாமி . இவரது மகன் சக்திவேலுக்கும் இவரது பங்காளியான மாது மகன் சபரிக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.  இதில் சக்திவேல் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக தலையில் ரத்தக் வெள்ளத்தில் இருசக்கர வாகனத்திற்கு அடியில் கிடந்துள்ளார்.

சபரி

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறிவிட்டனர். இந்த கொலை குறித்து வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் 3 மாதங்களாக எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சபரியை அழைத்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  அவரது வாக்குமூலத்தில் தாத்தா சொத்தை கிரையம் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சக்திவேல்  பங்காளி மேல் சபரி வஞ்சினம் வைத்துக் கொண்டிருந்தார்.

சபரி

அவரை தீர்த்துக்கட்ட சமயம் பார்த்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து மாட்டிக்கொள்ளாமல் கொலை செய்வது எப்படி என்பது குறித்து யூடியூபில்  வீடியோவை பார்த்து பங்காளியை மண்வெட்டியால் அடித்து கொலை செய்துள்ளார். எதுவும் தெரியாதது போல் நடமாடி வந்ததை ஒப்புக்கொண்டார். இந்த கொலையை செய்து முடிக்க  கடந்த 6 மாதங்களாக ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web