பட்டப்பகலில் காதலியின் கழுத்தறுத்து கொன்ற இளைஞர்... தூக்கிட்டு தற்கொலை!

 
சுவேதா

காதலியுடன் வழக்கமாக சந்தித்து பேசும் இடத்தில் பேசிக் கொண்டிருந்த போதே, எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென காதலி சுவேதாவின் கழுத்தை அறுத்து, தானும் தற்கொலைக்கு முயன்ற ராமச்சந்திரன், தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தார்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைப்பெற்ற இந்த செயல் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்திருந்த ராமச்சந்திரன், தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (27). என்ஜினீயரிங் பட்டதாரியான ராமச்சந்திரன், சென்னை குரோம்பேட்டை ராதா நகரைச் சேர்ந்த சுவேதா(21)  என்பவரைக் காதலித்து வந்தார். சுவேதா லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி சென்னை தாம்பரம் ரெயில் நிலையம் அருகே ராமச்சந்திரனும், சுவேதாவும் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் பேசிக் கொண்டு இருத்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராமச்சந்திரன், தனது காதலியின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். இதில் சம்பவ இடத்திலேயே சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.  

சுவேதா

கழுத்து அறுபட்ட நிலையில் ராமச்சந்திரன், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் ராமச்சந்திரனை கைது செய்தனர். 

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் 1 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து ஜாமீனில் வெளிவந்தார். மேலும் இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிலையில் தனது சொந்த ஊரில் இருந்த ராமச்சந்திரன் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள புளியமரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமச்சந்திரன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த அவரது உறவினர்கள் இது குறித்து வலிவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சுவேதா

இது குறித்து வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனது காதலியை கொன்று விட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த நாகை என்ஜினீயர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web