காதலிக்க வற்புறுத்தி தொல்லை தந்த இளைஞர்... பள்ளி மாணவி தற்கொலை!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மாணவிக்கு காதலிக்குமாறும், திருமணம் செய்துக் கொள்ளலாம் என்றும் இளைஞர் வற்புறுத்தி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் தொல்லை தாங்க முடியாமல் போகவே, இளைஞரின் காதல் தொல்லைக் குறித்து தனது பெற்றோரிடம் மாணவி கூறியிருக்கிறார். பின்னர் இது குறித்து மாணவியின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் இரு தரப்பையும் அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தற்கொலைக் குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏத்தாப்பூர் போலீசார் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், மாணவியைக் காதலித்த இளைஞரின் தங்கை அந்த மாணவியிடம், தனது அண்ணனை திருமணம் செய்து கொள்ளும்படியும் அவ்வாறு செய்தால் வழக்கிலிருந்து தப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது இதனையடுத்து போலீசார் இளைஞர், அவரது தந்தை காத்தவராயன், தங்கை உட்பட மூன்று பேரும் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இளைஞரின் தந்தை காத்தவராயன் என்பவரை போலீசார் கைது செய்து தலைமறைவாக உள்ள இளைஞர் மற்றும் அவரது தங்கையை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!