இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை! தங்கையின் கணவர் வெறிச்செயல்!

 
ராதிகா

மதுரை யாகப்பா நகர் பகுதியில் வாசுதேவன் (27), ராதிகா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு அகன்சா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மாலையில் வாசுதேவன் வழக்கம்போல் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். அப்போது ஆட்டோவில் 5 பேர் கும்பல் ஆயுதங்களுடன் இறங்கியது. அவர்களை பார்த்ததும் வாசுதேவன் தனது வீட்டுக்குள் சென்று அறை கதவை மூடிக்கொண்டார். 

எனினும் கதவை உடைத்து உள்ளே புகுந்த அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. பின்னர் அவர்களிடமிருந்து தப்பி வீட்டின் வெளியே வாசுதேவன் ஓடினார். பின்னர் அங்கிருந்த லாண்டரி கடைக்கு சென்று ஒளிந்து கொண்டார். 

ராதிகா

எனினும் பின் தொடர்ந்து வந்த 5 பேரும் கடைக்குள் புகுந்து கத்தி, அரிவாளால் வாசுதேவனை சரமாரியாக வெட்டினர். பின்னர் அவர்கள் ஆட்டோவில் ஏறி தப்பி சென்று விட்டனர். இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த வாசுதேவனை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக அண்ணாநகர் போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. 

ராதிகா

வாசுதேவனின் தங்கை பூபதிக்கு மணிகண்டன் என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். பூபதியின் நெருங்கிய நண்பர் அரவிந்தன். இவர் அடிக்கடி பூபதி வீட்டுக்கு வருவாராம். அப்போது அவர் பூபதியை கேலி, கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி பூபதி தனது சகோதரர் வாசுதேவனிடம் தெரிவித்து உள்ளார். இதை தொடர்ந்து வாசுதேவன், அரவிந்தனிடம் தட்டி கேட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இதைத் தொடர்ந்து அவர் வாசுதேவனை கொலை செய்ய திட்டமிட்டார். பின்னர் தனது நண்பர்கள் லப்பர் என்ற முத்துக்குமார், பாண்டி, இந்து குமார் உள்பட 5 பேரும் சேர்ந்து வாசுதேவனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து கொலையாளிகள் லப்பர் என்ற முத்துக்குமார், கணேஷ்பாண்டி, இந்து குமார் ஆகிய 3 பேரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அரவிந்தன் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர். உறவினர்களால் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web