அந்த மனசு தான் சார் கடவுள்... சாக்கடையில் சிக்கிய மாட்டை தொடர் முயற்சியால் காப்பாற்றும் இளைஞர்... வைரல் வீடியோ!

 
மாடு

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதில் சில வைரலாகி விடுவதுண்டு. குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அனைத்துமே ட்ரெண்டிங்க் ஆவதுண்டு. அந்த வகையில் சமீபத்தில், ஒரு அகலமான வடிகாலில் சிக்கிய பசுவை இளைஞர் ஒருவர் மீட்ட வீடியோ வைரலாகி  வருகிறது.

இந்த வீடியோவில், ஒரு ஆழமான அதிக குப்பைகள் நிரம்பிய வடிகாலில் மாட்டிக் கொண்ட பசுவை தனது தொடர் முயற்சியால் போராடி இளைஞர் ஒருவர் காப்பாற்றினார்.  அந்த இளைஞரின் பெயர் வீரா. இவர் பலமுறை முயற்சித்து இறுதியில் பசுவை பாதுகாப்பாக சாக்கடையிலிருந்து வெளியே எடுத்துவிட்டார்.  இந்த வீடியோ குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுவரை இந்த வீடியோ 24 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.  

“உலகில் இன்னும் மனிதநேயமான செயல் நடைபெற்று தான் வருகிறது” என பலரும் தங்களது உணர்ச்சிகரமான பதிவுகளை தெரிவித்து வருகின்றனர். “மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையான பிணைப்பை எடுத்துக்காட்டுகிறது” என தெரிவித்து வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web