அலுவலகம் புகுந்து அரசு வழக்கறிஞர், மகளை அரிவாளால் வெட்டிய இளைஞர்.. அதிரடி உத்தரவு !!

 
ஜமீலா பானு

திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்த ஜமீலா பானு (42), மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக உள்ளார். இவருடைய மகள் நிஷா (21), சேலம் அரசு சட்டக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதியன்று, ஜமீலா பானு திருப்பூர் குமரன் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், தன்னுடைய வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்தார். அவருடன் மகள் நிஷாவும் உடனிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர், அலுவலகத்துக்குள் புகுந்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜமீலா பானு, நிஷா ஆகியோரை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்து போராடிய நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் இருவரையும் மீட்டனர். 

ஜமீலா பானு

பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருவரும் உடல்நலம் தேறினர். இதையடுத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சேலத்தில் நிஷா படிக்கும் அரசு சட்டக் கல்லூரியில், ஏற்கனவே படித்த திருப்பூர் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த முகமது ரகுமான்கான் (25) என்பது தெரியவந்தது.

முகமது ரகுமான்கான் இளம்பெண் நிஷாவுக்கு காதல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சேலம் கொண்டாலம்பட்டி காவல் நிலையத்தில் முகமது ரகுமான்கான் மீது நிஷா ஏற்கனவே புகார் அளித்ததும், பின்னர் ரகுமான்கான் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியேவந்ததும் தெரியவந்தது.

ஜமீலா பானு

புகார் அளித்த ஆத்திரத்தில் இருந்த, முகமது ரகுமான்கான் திருப்பூரில் அலுவலகத்தில் இருந்த நிஷா மற்றும் அவருடைய தாய் ஜமீலாபானு ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து கேரளாவில் பதுங்கி இருந்த வழக்கறிஞர் முகமது ரகுமான்கானை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பார் கவுன்சிலில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

    

From around the web