மரணத்தை வென்று காட்டிய இளைஞர்.. சாதனைப் பயணம்!

 
நிக்கோலஸ் க்ராஃப்ட்

உலகம் முழுவதும் இப்போது மனிதர்களிடம் இருக்கும் பெரும் பிரச்சனை உடல் பருமன். சிறியவர்கள் முதல் முதியவர்கள் இந்த அவதிக்கு ஆளாகின்றனர். இதனால் சாலைகள், பூங்காக்கள் என பல இடங்களில் ஏராளமானோர் நடைபயிற்சி செல்வதை காணமுடியும். பின்னர் உடல் எடையை குறைக்க சிகிச்சை, டயட் என பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இவ்வாறு உடல் எடை பிரச்சனையால் ஒருவர் பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிசிசிபியைச் சேர்ந்த ஒருவரிடம், நீங்கள் இன்னும் 5 ஆண்டுகளில் உயிரிழப்பீர் என மருத்துவர் கூறியுள்ளது தான் இந்த பரபரப்புக்கு காரணம். இதில் 4 ஆண்டுகள் முடிந்து விட்டது.

நிக்கோலஸ் க்ராஃப்ட் என்ற 42 வயது நபர் 300 கிலோ எடையில் இருந்தார். கடுமையாக தனது உடல் எடையை குறைக்க முயன்றவர் 165 கிலோ எடையைக் குறித்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். இவர் பள்ளியில் படிக்கும் போதே 136 கிலோ இருந்தாராம். மனச்சோர்வு காரணமாகவே அதிகமாக சாப்பிட்டு அதுவே உடல்பருமனுக்கு வழிவகுத்துள்ளது.

நிக்கோலஸ் க்ராஃப்ட்

கடந்த 2019ம் ஆண்டு 300 கிலோ உடல் எடையைக் குறைக்கத்தொடங்கிய முதல் மாதத்தில் உடற்பயிற்சி மூலம் 18 கிலோ குறைத்திருக்கிறார். எனினும் பெரியளவில் பலன் கொடுக்கவில்லை. இதனால் உடற்பயிற்சியுடன் உணவு கட்டுப்பாட்டிலும் இறங்கினார். முறையான உணவு பழக்கங்களை எடுத்தார். அவர் உடல்எடையைக் குறைக்க சிறப்பான டயட் எல்லாம் இல்லையாம், தினசரி கலோரிகள் சேர்ப்பதை மட்டுமே குறைத்தாராம்.

நிக்கோலஸ் க்ராஃப்ட்

தொடர்ந்து நான்கு ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகே இப்போது 165 கிலோவாக உடல் எடையை குறைத்துள்ளார். இது குறித்து பேசிய நிக்கோலஸ், நான் என்னுடைய உடல் எடையைக் குறைக்க ஏதாவது செய்யவில்லை என்றால் இன்னும் 3 முதல் 5 ஆண்டுகளில் இறந்து விடுவேன் என மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர். பின்னர் தீவிர முயற்சி செய்தேன்.

எனக்கு எனது பாட்டி மிகவும் உறுதுணையாக இருந்தார். இப்போது தன்னால் சுவாசிக்க முடிவதாகவும் நினைக்கும் இடத்துக்கு பயணிக்க முடிவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் நிக்கோலஸ்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web