பள்ளி மாணவர்களின் தகவல் திருட்டு.. 3 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீஸ் வழக்கு !

 
மாணவர்

தமிழ அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளின் முழுவிவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை சேகரித்து பாதுகாப்பாக வைத்திருந்தது. இந்தத் தகவல்கள் எல்லாம் பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் ரகசியமாகச் சேமித்து வைக்கப்படும்.

இந்நிலையில் மாணவ, மாணவிகளின் முழு விவரங்கள் திருடப்பட்டு, தனியார் உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு விற்பனை செயப்படுவதாகத் தகவல் வெளியானது. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.  

மாணவர்களின் முழுத் தகவல்களில் உள்ள அவர்களது பெற்றோர் செல்போன் எண்களை வைத்து, அதன் மூலம் மாணவ, மாணவிகளைத் தொடர்பு கொண்டு தங்கள் கல்லூரியில் சேருவதற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இப்படி, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி என பலரும் மாணவர்கள் தரவுகளைப் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்

மாணவர்

குறிப்பாக தமிழக அரசின், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 6 லட்சம் மாணவர்கள் மற்றும், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும் 35 ஆயிரம் மாணவர்கள்  என அனைத்து மாணவர்களின் தரவுகளையும் வெறும் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படிச் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவது குறித்துப் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா உத்தரவின்பேரில், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, பள்ளி கல்வித் துறையில் இருந்தே, தனியார் கல்லூரிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யப்பட்டிருந்ததும், அவை வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதும், பணம் கூகுள்பே மூலம் அனுப்பப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாணவர்

இதனைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அதிகாரி புண்ணியகோடி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்துள்ளார். அதில், 'பாதுகாப்பாக வைக்க வேண்டிய மாணவர்களின் தரவுகளை சிலர் விற்பனை செய்துள்ளனர். எனவே, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளி மாணவர்களின் தகவல் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மோசடி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web