அன்று சச்சின், இன்று தோனி!! பொல்லார்ட் நெகிழ்ச்சி

 
தோனி, பொல்லார்ட்

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 31 முதல் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று  5 முறை சாம்பியனான மும்பை அணியை எதிர்த்து 4 முறையில் சாம்பியனான சென்னை அணி விளையாட இருக்கிறது. இதனால் விறுவிறுப்புக்கு சற்றும் பஞ்சம் இருக்காது. ரசிகர்கள் இந்த போட்டியை காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். இந்த போட்டி  நிச்சயம்  ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களையும், நினைவுகளையும் கொடுக்க இருக்கிறது. நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி குஜராத்திடம் தோல்வியடைந்தாலும், லக்னோ அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பொல்லார்ட்

ஆனால் மும்பை அணி பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் வெற்றியை பதிவு செய்யும் உத்வேகத்துடன் விளையாடும். அதே நேரத்தில் பந்து வீச்சில் கடந்த முறை நடந்த சொதப்பல்கள் மீண்டும் தொடர்ந்தால் அணிக்கு தலைமை பொறுப்பு வேறு யாராவது தான் வருவார்கள் என சென்னை அணிக்கு தோனி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அந்த வீரர்களும் முழு வேகத்துடன் களம் இறங்க தயாராக உள்ளனர். 

சொந்த மண்ணில் களமிறங்குவதால் சென்னை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்திலும் மும்பை அணி உள்ளது. இதனிடையே தோனியை காண்பதற்காக சென்னை அணி விளையாடும் போட்டிகளை நேரில் காண சிஎஸ்கே ரசிகர்கள் மைதானத்தில் குவிந்து வருகின்றனர். சேப்பாக்கம் மைதானம் சென்னை அணியின் கோட்டை என்றாலும், அகமதாபாத் மைதானத்திலும் மஞ்சள் படை சூழ்ந்தது எதிரணி வீரர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தோனி

இதனிடையே வான்கடே மைதானத்தை மும்பை அணியின் கோட்டையாக காட்டுவதற்காக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தரப்பில், இரு முக்கிய ஸ்டாண்டுகளில் மும்பை ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் இந்தியாவின் அனைத்து மைதானங்களிலும் கூடி வருவது பற்றி மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் எந்த மைதானத்தில் ஆடினாலும், எங்கள் அணி உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது போல் ரசிகர்கள் ஆதரவு இருக்கும். அப்படியான ஆதரவு, சமகாலத்தில் தோனிக்கு கிடைத்து வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி இந்தியாவின் எந்த மைதானத்தில் ஆடினாலும், சிஎஸ்கே ரசிகர்கள் நிச்சயமாக கூடி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web