பேச நிறைய இருக்கிறது... விரைவில் மனம் திறப்பேன்.. திருச்சி சிவா அதிரடி!

 
திருச்சி சிவா

திருச்சியில் அமைச்சர் நேருவுக்கு திமுக எம்பி சிவா ஆதரவாளர்கள் கறுப்புக்கொடி காட்ட. பதிலுக்கு நேரு ஆதரவாளர்கள், சிவா வீட்டுக்குள் புகுந்து புறப்பட்டு சூறையாட... பெரும் களேபரம் ஏற்பட்டது. வெளிநாட்டில் சுற்றுப் பயணத்தில் இருந்த எம்பி சிவா நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர், அங்கு காத்திருந்த நிருபர்களிடம் கூறும் போது, 

அரசு முறை சுற்றுப்பயணமாக 'பஹ்ரைன்' சென்றிருந்த நான், இப்போது தான் ஊருக்கு திரும்பி வருகிறேன். நடந்த நிகழ்வுகளை ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக தெரிந்து கொண்டேன். இப்போது நான் எதையும் பேசும் மன நிலையில் இல்லை. கடந்த காலங்களில் பல சோதனைகளை சந்தித்து இருக்கிறேன். அடிப்படையில் முழுமையான, அழுத்தமான கட்சிக்காரன் நான். என்னைவிட எனது கட்சி தான் எனக்கு முக்கியம் என்பதால் எதையும் நான் பெரிதுபடுத்தியதில்லை. யாரிடமும் சென்று புகார் கூறியதும் இல்லை.

நேரு காஜா

தனி மனிதனை விட இயக்கம் பெரிது என்ற தத்துவத்தின் அடிப்படையில் வளர்ந்தவன். அதே அடிப்படையில் இருப்பவன். இப்போது நடந்துள்ள நிகழ்ச்சி மிகவும் மனவேதனையை தருகிறது. எனது வீட்டில் பணியாற்றிய வயது முதிர்ந்த வேலையாட்கள், நண்பர்கள் ஆகியோர் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு நான் ஆறுதல் கூற வேண்டும். பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்கு நிறைய தகவல்கள் இருக்கிறது. இப்போது களைப்பும், மனச்சோர்வும் இருப்பதால் இன்னொரு நாளில் சந்திக்கிறேன் எனத் தெரிவித்தார்.

நேரு காஜா

வீட்டு வளாகத்தில் சேதப்படுத்தப்பட்டிருந்த கார் மற்றும் பைக்கினை மிகுந்த சோகத்துடன் பார்த்து விட்டு உள்ளே சென்ற அவர், தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். சிவா எந்த காலத்திலும் அவருக்கென தனி ஆவர்தனம் செய்ததும் இல்லை. அவர்களிடம் தொண்டர்களும் இல்லை. ஆரம்ப காலத்தில் இளைஞரணியை வளர்க்க பாடுபட்டிருக்கிறார் என்பதென்னவோ உண்மை. அதையே சொல்லிக் கொண்டு எத்தனை காலம் தான் காலத்தை ஓட்ட முடியும் என அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் முனகிய படியே கடந்து சென்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web