சேலத்தில் பரபரப்பு... கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு வாலிபர் தற்கொலை முயற்சி!

 
சேலத்தில் பரபரப்பு... கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு வாலிபர் தற்கொலை முயற்சி!

கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலத்தில் பரபரப்பு... கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு வாலிபர் தற்கொலை முயற்சி!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மோகன பிரியன், ஐடிஐ முடித்துவிட்டு தற்போது வேலை தேடி வருகிறார். இவர் சேலம் மாவட்டம் மின்னாம் பள்ளியைச் சேர்ந்த சூர்யா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். 

இந்நிலையில் இன்று காலை மாணவி கல்லூரி செல்வதற்காக சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது, அங்கு வந்த மோகன பிரியன் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சூர்யாவைக் குத்தினார். பின்னர் அவரும் தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

அங்கிருந்த பயணிகள் உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சேலத்தில் பரபரப்பு... கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு வாலிபர் தற்கொலை முயற்சி!

இன்ஸ்டாகிராமில் பழகி வந்த நிலையில் அந்த மாணவி அவரை பிடிக்கவில்லை என்று நிராகரித்ததாகவும், ஆத்திரத்தில் அந்த இளைஞர் கல்லூரி மாணவியைக் குத்தி தானும் தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web